ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

21.12.23
கவி இலக்கம் -296
கடந்து வந்த பாதையில்

கடந்து வந்த பாதையில்
தொடர்ந்து தந்த அன்பில்
படர்ந்த சொந்தமின்றிய
பந்தம் தந்த பிணைப்பு

பெற்றெடுத்த பிள்ளையாய்
ஊற்றெடுத்த அகதி மண்ணில்
எமை உப்பு மூடை சுமந்த
ஜேர்மன் பெற்றோர் பூரிப்பு

செய்த உதவியோ உச்சம்
எழுதவே முடியாத மிச்சம்
முழுதாகத் தாயகப் பிரிவு
மறக்க உபசரித்த உள்ளம்

இரண்டும் இவ் உலகை
விட்டுப் பிரிந்ததே எமை
வாட்டி வதைக்கும் மறக்க
முடியாத தாங்கொணாத்
துயரமே .

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading