வசந்தா ஜெகதீசன்

மொழியெனும் வேரே முகவரியின் பதிவே…

குமரியிலே பூத்த மொழி
குவலயத்தில் மூத்தமொழி
தாய்மொழியாய் தளிர்த்த மொழி
தமிழெனவே படர்ந்தெழுந்து
தரணியிலே நிமிர்ந்த மொழி

வீரத்தின் வரலாறும் வேட்கையின் வாகையும்
தொன்மையின் புலமையிலும்
தொப்பிள் கொடியாகி தொடர்சொந்தம் உறவாகும்
தாய்மொழியே தமிழ்மொழி

காப்பியத்தின் பதிவேடாய்
காலங்களின் முச்சங்கம்
மூத்த மொழி ஆதாரம்
முதல் இலக்கணமாய்
தொல்காப்பியமும்
வரலாற்றை வகுத்துதெழுதும்
வாகை மொழி தமிழாகும்

எட்டுத்தொகை பத்துப்பாட்டு
பதினென்கீழ்கணக்கு நூலாகி
வரலாற்றை சான்றாக்கும்
வண்ணமொழி நிமிர்வாகும்

பலமொழிக்கு தாய்மொழியாய்
செந்தமிழாய் சீராகி
செதுக்கும் புலமையிலே
உலகாளும் உயர்மொழியாய்
வீறு கொள் தாய்மொழியே
வேராகி விழுதான வெற்றியின் வாகை நீ
முகவரியின் முதன்மை நீயே!

நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading