பாசப்பகிர்வினிலே……58
பாசப்பகிர்விலே!
வசந்தா ஜெகதீசன்
பாமுகமே வாழீ…
எழுகைக் கதிரொளியாய் எண்ணத்தின் பேரொளியாய்
வானின் அலையொலியாய் வார்த்தையின் எழுத்தொலியாய்
பொறித்தே எழுந்தது பொறிகொண்டு பூத்தது
இலக்கின் வாகையுடன் இடர்கொண்டே தொடர்வது
உயர்ந்தெழுந்து உள்வீழ்ந்து உருவாக்கத்திறனீர்ந்து
எழுத்தின் பதியத்தில் ஏற்றத்தின் வேட்கையில்
எழுந்திட்ட கோபுரத்தின் இருபத்தியேழு அகவை
ஆழமாய் உழுதிட்ட அத்திரவாரப் படிக்கற்கள்
தாழ்ந்து பாயும் நீர்வீழ்ச்சி மீண்டெழுமே மின்னாகி
வீழ்ந்து வீழ்ந்து எழுந்ததினால் வீரியமே உரமாகும்
எழுத்தாகிப் பூத்தது எண்ணங்களில் ஓளிர்வது
வாழ்வின் பொக்கிஷத்தை வரலாறாய் பதிப்பது
தடாகத்தின் தாமரையாய் தனித்துவமாய் மிளிர்வது
நிறைகுடமாய் நிமிர்வாக்க நித்தமுமாய் ஒளிர்வது
எத்தனையோ படைப்புக்கள் எம்மவரின் உருவாக்கம்
எழுத்தின் வேரிலே எழுந்திட்ட கோபுரம்
பாமுகமே நீ வாழி எத்தனை தொகுப்பாளர் தொடராகி வடம்பிடித்து எழுத்திலே
இளையவர்கள் உருவாக்கம் இலக்கிலே விடிவெள்ளி!
பாமுகத்தின் கலைக்குடும்ப பணியார்வம் வாழியவே வாழியவே.
நன்றி
