மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

மூலதனம்

மூலதனம்
தேவைக்கு ஏற்ப தேவைப்படும்
தேசங்கள் முழுதும் தேடப்படும்
மூலப்பொருளாய் மூலதனம்
முதலீடாகும் முழஉலகும்
வாழ்வுக்கும் இதுவே அத்திவாரம்
வருமானத்திற்கும் வாழ்வு தரும்
உறவுக்குள் உரிமைக் குரல் எழுப்பும்
நல் நட்புக்கும் நம்பிக்கை உரம் கொடுக்கும்
அறிவுக்கு கல்வியாய் அடிபதிக்கும்
அன்புக்கும் இதுவே அடிப்பலம் கொடுக்கும்
காலத்திற்கு நேரம் மூலதனம்
கவிதைக்கும் கருவே மூலதனம்

இன்றைய சூழலின் எழுச்சிக்கு
ஊடகப் பணிகள் மூலதனம்
ஓற்றுமைக் குரலை ஒன்றிணைக்க
ஆற்றிடும் அளப்பெரும் சேவைகள் உயர்வுபெறும்

காத்திடம் அறிந்து கருக்கொண்டு
காரியம் ஆற்றிடும் ஆளுமையும்
ஓருவரின் முன்னேற்ற முனைப்புக்கு மூலதனம்
பணம் என்ற ஓன்று மட்டுமல்ல
பற்பல வளங்களும் மூலதனம்
உயிருக்கு சுவாசம் மூலதனம்
உடலுக்கு உயிரே மூலதனம்
ஆரோக்கியமே அனைத்திற்கும் மூலதனம்
அன்பும் அறனும் பொக்கிஷங்கள்
முதலீட்டு வாழ்வோம் மூலதனமாய்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading