தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

ஒலிம்பிக்கில் ஒளியில்....

ஒலிம்பிக்கின் ஒளியில்…
வேகம் விவேகம் மனத்துணிவும்
விரைவு வெளிப்படும் தனித்திறனும்
வினைத்திறனாகிடும் விளையாட்டில்
ஒற்றுமை ஒளிரும் ஒலிம்பிக்கில்
ஐவகை கண்டத்தின் குறியீடும்
அவரவர் திறனின் முதலீடும்
ஐக்கியப் படுகின்ற விளையாட்டில்
ஆர்வத்தின் திறனுக்கு அத்தாட்சி
ஆற்றல் மிகுபடும் ஒலிம்பிக்கில்
நூற்றாண்டின் விழுமியத் தொடராகி
பிரான்ஸ் நாட்டில் மூன்றாம் முறையாக
முழுமதியாகி முகிழ்கின்ற காலநிலா
எண்ணற்ற போட்டிகள் இணைவாகும்
இருபாலரின் இணைவு
சரிசமமாகும்
ஒலிம்பிக்கின் ஒளியில் எம்மவரும்
ஒரணியாகிடும் நிகர்திறனும்
தொழில் நுட்பத்திறனின் பேரெழிலும்
ஒன்றித்து மிளிர்ந்திடும் மிடுக்காகி
ஒலிம்பிக்கின் நூற்றாண்டு
ஒளிர்கிறது
உலகெங்கும் உன்பேச்சே நிகழ்கிறது
விளையாட்டுத் திறனின் விற்பனமே
நூற்றாண்டு கடந்தும் உன்னாட்சி
உலகாளும் உயர்வேட்கை ஒற்றுமையே
குறிக்கோளின் இலக்கிலே குன்றாது
குவலயத்தில் குன்றில் நீ விளக்கொளியே!
நன்றி மிக்க நன்றி

தொடரும் விடுமுறை வாரங்களின் நற்பொழுதிற்கும் வாழ்த்துக்கள்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan