மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

கல்வி..
அறிவின் கடலாய் பரந்தது
ஆற்றல் மிகுதி நிறைந்தது
வற்றாச் சுரங்கத்தின் வலம்புரி
வளர்ச்சி குன்றா வளர்மதி
எங்கும் பேரொளி விருட்சமாய்
எதிலும் முதன்மை மகுடமாய்
தங்கு தடையற்ற தண்ணொளி
தாங்கும் அறிவின் சுடரொளி
உலகின் பிரகாச விளக்கொளி
உராய்ந்து புடமிடும் அறிவொளி
அளவுகோலற்ற அரியாசனம்
அறிவின் வித்தே பெரும்சாசனம்.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading