வசந்தா ஜெகதீசன்

கல்லறை வீரர்கள் கனவிதுவோ…
விழிமூடி உறங்கிடும் வீரரே
விடுதலை வித்தான தோழரே
கல்லறைக் காவியம் கருக்கொள்ளும்
காலத்தின் நாற்றாய் விதையூன்றும்

தாயக மீட்பே தாகமாய்
தன்னுயிர் ஈகையின் தியாகமாய்
மண்மீட்பில் மறவராய் உயீர்ந்தீர்
மாவீரர் கனவோடு மண்சாய்ந்தீர்

அழுகுரல் அவலங்கள் அனர்த்தங்கள்
ஆகுதியானவர் வேட்கைகள்
அளவிட முடியாத போர்வலி
அன்னை மண்மீட்பில் தினசரி

ஈகையில் உருகிய தீபங்கள்
எரிமலைக் குமுறலின் சீற்றங்கள்
வேரெனத் தாங்கிய வீரரே

கனவது ஈழமே தாகமாய்
கருத்தரித்துள்ள கல்லறை யாகமாய்
மீளவும் மீளவும் மிடுக்குறும்
மீட்டிடும் ஈழமே வலுப்பெறும்.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan