அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

வாரம் 241

[ வாரம் 241 ]
“தீப ஒளியே”

தீபஒளியேற்றிய இறைவழிபாடு தமிழரின் சமயச்சடங்காகும்.
ஒளிவடிவையே இறைதோற்றமாக்குவதும் சைவசமயமாகும் .
பிறமதங்கள் தீபஒளியேற்றுதல் ஒருமைப்பாட்டின் அம்சமாகும்
மெழுகுதிரி ஏற்றி, எண்ணெய்த்தீபங்காட்டி, மின்விளக்கு அலங்காரமும் இறை வழிபாட்டுமுறையாகும்.

ஒளிபிறந்து அஞ்ஞான இருளகன்று மெஞ்ஞான ஒளிவீசும் தீபஒளி
ஒளியின்றி உயிர்களுக்கு வாழ்வில்லை,ஒளியில்லா உலகிற்கே அர்த்தமில்லை
சூரிய ஒளியின்றி தாவரங்களுக்கோ உணவில்லை
தீப ஒளியில் வட்டமிடும் பூச்சிகள், தீபாராதனையில் பக்தர்கள், ஒளியின் கவர்ச்சி எங்கில்லை?

தீபஒளியின் மகத்துவம்காட்டும் ஒலிம்பிக்தீபம்
தீமையகற்றி நன்மைகாட்டும் தீபாவளி அலங்காரதீபம்
பிதுர்கடன் தீர்த்தல் கடமையெனக்காட்டும் கார்த்திகைத்தீபம்
மாவீரர் போற்றித்தாயகம் மீட்போம் எனும்அஞ்சலித்தீபம்
தீபஒளியே நீடுவாழ்க! தமிழர்தம் நெஞ்சங்களில் என்றும் வாழ்க!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading