தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
எனது மனது
-
By
- 0 comments
Jeya Nadesan
கவிதை வாரம்-03.02.2022 வியாழன்
கவி இலக்கம்-1453
பூக்கட்டும் புன்னகை
—————————–
பூக்கட்டும் எல்லோர் வாழ்விலும் புது வாழ்வு
புத்தாண்டு தினம் என்றென்றும்
பூரிப்போம் இன்னாளும்
புது உறவில் தழைத்து நாம்
வசந்த காலம் வளமாய் வரும்போது
சுகந்தம் வரும் சுமைகள் குறையட்டும்
அகமதில் புன்னகை மலரட்டும்
காலைக் கதிரவன் ஒளியில் மிளிர்ந்திட
வளரும் மரங்கள் இதழ்கள் விரிக்கட்டும்
மொட்டும் மலரும் பூத்துப் புன்னகைக்க
வண்டுகளின் ரீங்காரம் கானம் பாடும்
தேன் குடித்து மலர்களுடன் காதலில் மலரும்
திருவிழாக் கொண்டாட்டங்கள் களியாட்டங்கள்
ஆடம்பர கேளிக் கூத்துக்கள் இடம் பெறும்
மக்களின் மனதில் புன்னகை மலரும்
கண் போன்று கற்கும் கல்வியும் கலையும் பூக்கும்
மண்வாழ் மழலைகளின் புன்னகை மலரும்
அம்மாவின் தாலாட்டு பாட்டும்
மழலைக்கு இனிப்பான மருந்தாகும்
துரத்தும் தொற்று இடர்கள் நீங்கி
மக்கள் வாழ்வு மலர்ந்து மணக்கட்டும்
இன்பமாய் மனித வாழ்வு சிறக்கட்டும்
பசுமையை தந்து பந்தத்தை வளர்க்கடடும்
என்றுமே எல்லோர்க்கும் மகிழ்வாகவே மலரட்டும்
Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments
-
By
- 0 comments