பொன்.தர்மா

வணக்கம்
இது வியாழன் கவிதை நேரம்
இல .518
தலைப்பு
**** அகப்பை. , அகம் + பை****
——++++++—+++++———-
மனிதன் , இதில் ஒன்றை, உருவாக்கி அழகூட்டினான்.
மற்றொன்றை, இறைவன் உருவாக்கி ,உயிர் கொடுத்தான்.

பரிமாற்றம்,பாவனைகள்,பலதுமாய் , நிலை மாற்றம் பலவும் உண்டு.
பகுத்தறிந்து பாவிப்பதில்,சிலரிடையே ,சில மாற்றமும் உண்டு.

( அன்பை) அள்ளிப் பரிமாறி, ஆழ் மனதில் இடம் பிடிகும், இதில் ஒன்று.
கிள்ளிப் பரிமாறக்,குவளையுள்ளே கூத்தடிக்கும், மற்றொன்று.

ஆத்திரம், அவதி கொண்டு, அடிதடி க்கும், தூக்குதலுண்டு.
ஆறாத் துயரினாலே, அகப்பையுமோ, முறிபட்டு மாய்வதுண்டு.

அன்பினை நிறைக்கையிலே, ஆனந்தம் , ஊற்றெடுத்துப் பெருகும்.
பண்பினை , இழக்கையிலே, பாவம் குடி கொள்ளும் கோட்டையாக , உரு மாறும்.
அது……….அக…….பை
அன்புடை உபசரிப்பு, அது , அகப்பை பிடிக்கும் , அழகினிலே தெரியும்.
ஆக்கினை யால் உபசரிப்போ, அகப்பை வைத்துத் , துலாவி எடுக்கையிலே புரியும்.
“”” பொன்.தர்மா””'”

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading