பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவி நேரம்.
இல.520
இயற்கை.
*************
ஆண்டவன் கொடையினிலே, அழகிய தோற்றங்கள்.
அதிசயப் படைப்பினில் , அதற்குள்ளும் மாற்றங்கள்.

அறிந்தும், அறியாததுமாய், எண்ணற்ற , விசித்திரமான தோற்றங்கள்.
அவனியைக் காக்க வந்த அவதார தெய்வங்கள்.

எண் சாண் உடம்பினுள்ளே, உயிர் துடிக்க, உதவி நிற்கும்.
ஒட்டுகின்ற நோயதற்கும், எட்டிப்போக, மருந்தளிக்கும்.

சுட்டித் தனத்தாலே , சிறுகுறும்பும், செய்ய எண்ணும்.
வட்டி , முதலோடு, வாரியும் தான் கொண்டு செல்லும்.

** இயற்கை**
பிறக்கும் நாளினை, ஏட்டிலையும் குறித்து வைக்கும்.( ஆனால்)
இறக்கும் நாளதனை, மர்மாக மறைத்து வைக்கும் .

பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading