நன்றியாய் என்றுமே!

நகுலா சிவநாதன் நன்றியாய் என்றுமே! பெரும் செல்வம் கல்விதனை பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம் அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை அன்போடு...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

இரா விஜயகௌரி

மௌனம் பெரு மரணம்

ஓடி ஓடிக் கொண்டிருக்கும் உலகு
நிழல் தேடி தேடிச் சென்றிருக்கும் உறவு
உயிரப்பின் வருடல்களால் உருவாகும் கணங்கள்
அவை உயிர்த் துடிப்பை இழப்பின்அங்கு மரணம்

நீத்தார் மட்டுமல்ல இறந்தோர்
செயலிழந்த மாந்தர்களும்ஜடங்கள்
செறிவிழந்த வாழ்வுமது. சருகே
இழைவெழுத மறந்தோரும் பிணம்தான்

கணங்களுடன் போராடும் உலகில்
தனித்திருந்து வாழ்கணங்கள் கொடுமை
இயல்பிலிதை உணர்பவர்கள் சிலரே
உரைப்பதற்கு மொழியிங்கே கதறும்

மௌனமிது மூச்சடைத்து உழல
உயிருடலும். ஜடமாகி. முடங்கும்
கனக்கின்ற நொடிகளெலாம். கலங்கும்
உயிர்ப்பெழுதா நொடிகள் தமை உடைப்போம்

நம்கைகள்தாம் எமக்கு பலமே
நம்கால்கள் நிலைத்தெழுத. உழைப்போம்
மரணத்தால் மரணிக்கா வாழ்வை
மௌனத்தை. உடைத்தெறிந்து படைப்போம்

Nada Mohan
Author: Nada Mohan