கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

நேவிஸ் பிலிப்

வியாழன் கவிதை இல (55) 31/03/22
மூத்தோர் மாண்பு போற்றுவோம்.

பாரம்பரியத்தை வாழ்ந்து
அமுதோடு பண்பாடும் ஊட்டி வளர்த்து
விழுதுகளாய் நாம் வளர
காரணமாய் இருந்த வேர்கள்.

பதறாது காரியமாற்றி
சிதறாது சேமித்து வைத்து
சிக்கனமாய் செலவு செய்து
பக்குவமாய் வாழ்ந்து எம்மை

கரை சேர்க்கும் தோணியாய்
உயர் நிலை அடைய ஏணியாய்
மணம் வீசத் தேய்ந்த சந்தணமாய்
தியாக சின்னமாய் ஒளிர்ந்த எம் மூத்தோர்

மதிப்பு மிக்க பெரியோரை
அவமதிக்க மாட்டோம்,
கண்மணி போல் காப்போம்
மனம் நோகப் பேசோம்.

மூத்தோர் வாழும் வீட்டில்
நடமாடும் தெய்வத்தின் பாதச் சுவடிகள்
நாளும் பணிந்து வாழ்வோம்,
நன்றியோடு போற்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading