கமலா ஜெயபாலன்

தொழிலாளி
தன்னை உருக்கித் தரணி காப்பான்
குன்றில் ஏற்றிக் குலமும் வளர்ப்பான்
மண்ணைப் பொன்னாக்கி மகுடம் சூடுவான்
எண்ணில் அடங்கா இன்னல்கள் காண்பான்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் போனாலும்
தாயின் அன்புபோல் தருபவர் யாருளரோ
நோயில் நொடிந்து நொந்தாலும் வாழ்வில்
வாயில்லா சிவனாய் வாழ்ந்து மடிந்தான்

கால மாற்றம் கடுகதி வாழ்க்கை
கோலம் மாறிக் கொண்டது இன்று
விஞ்ஞான வாழ்வு வெற்றியும் கொண்டது
மெஞ்ஞானம் எல்லாம் மாற்றம் கண்டது

அரிவி வெட்ட அசுர இயந்திரம்
கருவிகள் பலவும் கண்டு உலகில்
மருவி இன்று மறைந்து போகுது
கண்ணி என்ற கற்கை மனிதனால்.

தொழில் நுட்பம் தோன்றினாலும் தோற்காது
தொழிலாளி நற்பணி தொடரும் காலமெல்லாம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

    Continue reading