சக்தி சிறினிசங்கர்

இனிய இரவு வணக்கம்
திரு நடா மோகன் அவர்களே!
திரு.ப வை.ஜெயபாலன் அவர்களே!
மற்றும் பாமுக உறவுகளே!
சந்தம் சிந்தும் சந்திப்பு !
கவித்தலைப்பு

பாமுகம்!
புலத்திலே பூத்தது புதுமைகள் படைக்குது
பலவித நிகழ்வுகள் பெருமிதம் கொள்ளுது
எழுத்திலே முதலிது ஏற்றமும் கண்டது
பழுக்களும் சுமந்து பாரினில் உயருது
வழுக்களும் இன்றியே வழமையில் நிகழ்வுகள்
அழுக்குகள் அற்ற இதயங்கள் பேசுது
தொழுதிடத் தக்கது தொண்டுகள் தொடருது
இழுத்திடும் வடத்தினை இளையவர் பற்றிட
பணிகளில் பற்றுடன் பணிப்பாளர் ஒன்றித்திட
அணிசேர் துணையாய் இல்லாள் இருந்திட
சொந்தமாய் உறவுகள் சோர்வின்றிப் பயணித்திட
பைந்தமிழ் மொழியும் பண்புடன் வளர்ந்திட
ஆண்டுகள் நிறைவாய் ஆளுமை வளருது
வாண்டுகள் பலரின் வல்லமை வளருது
பந்தலாய் விரிந்தது பாமுகம் பேரது
எந்தனின் கவிகளும் அரங்கமும் கண்டது
நன்மைகள் பெற்றேன் நன்றியும் பெருகிட
இன்னமுத மொழியிலே இணைக்கிறேன் ஆசிரியப்பா
மகிழ்விலே திளைத்து மனதாதினை இணைத்து
பகிர்கிறேன் வாழ்த்துகள் பல்லாண்டு
வாழிநீ!

ப.வ.அண்ணா! உங்கள் பணி பாரிய பணி!
மிகுந்த நன்றியும் பாராட்டுகளும்

பந்தலாய் விரிந்தது பாமுகம் பேரது
எந்தனின் கவிகளும் அரங்கமும் கண்டது
நன்மைகள் பெற்றேன் நன்றியும் பெருகிட
இன்னமுத மொழியில் இணைக்கிறேன் ஆசிரியப்பா
மகிழ்விலே திளைத்து மனத்தினை இணைத்து
பகிர்கிறேன் வாழ்த்துகள் பல்லாண்டு வாழிநீ!

ப.வ.அண்ணா உங்கள் பணி பாரிய பணி. மிகுந்த நன்றியும் பாராட்டுகளும் உரித்தாகுக!
பாமுகப் பணிப்பாளர் குடும்பத்தினருக்கு பேரன்பு நன்றி!

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading