கெங்கா ஸ்டான்லி

இன்பம்

உன் மனம் சுத்தமானால்
துன்பமும் இன்பமாக ஒளிரும்.
செம்மையான செயல் இருந்தால்
சீர்மையுடன் சிறப்பும் அமையும்.
உரிமை உள்ளோரை
உதறிவிடுதல் துன்பம்.
வறுமை உள்ளோரை
வரவேற்று உபசரித்தல் இன்பம்.
உள்ளம் உடலினை வேதனை இன்றி
பவித்திரமாக வைத்தல் இன்பம்.
வெள்ளம் போல் நன்மை இன்பம்
குவலயத்தில் வாழ்வில் சுகந்தம் தருமே.
அன்பை வளப்படுத்திக்கொள்
அறிவுடன் அனைத்தும் தேடிவரும்
பண்பை மெச்சி வாழக்கற்றுக்கொள்
மிகையான புகலின்பம் கூடும் வாழ்விலே.

கெங்கா ஸ்டான்லி

Nada Mohan
Author: Nada Mohan