Jeya Nadesan

கவிதை நேரம்-24.11.2022
கவி இலக்கம்-1602
தலை சாய்ப்போம் மனிதம் நிமிர
வாழ்ந்தோருக்காய்

ஈழத்தமிழ்த் தாயின் கண்ணீரையும்
விடியலின் முகவரிக்காயும்
காவியங்கள் பல படைத்து நின்று
குருதியில் நனைந்த மைந்தர்கள்
கண்ணென காத்த மண்ணுக்காய்
மனித இனம் வாழ விடுதலுக்காய்
விடுதலை வாசம் தேடி ஓடிய கால்கள்
இலட்சியப் பாதை வழி சென்று
பயணத்தை தொடர்ந்த வீரர்கள்
நீராடும் விழிகளில் நினைவுகளாக
வராறு படைத்து விட்டு சென்ற மகான்கள்
இறப்பிலும் நினைவில் வாழும் தியாகிகள்
வாழ்ந்து மடிந்து புதையுண்டவர்கள்
கனத்த இதயத்துடனும் மாறா வலியுடனும்
நாமும் நினைவு கூர்ந்து தலை சாய்த்து வணங்குவோம்்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading