நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

Selvi Nithianandan

தரணியில் பெண்கள்

உருளும் உலகில் பெண்ணின் பெருமை
உயர்வின் பிடியில் மகிழ்வின் சிறப்பு
உலகை ஆளும் திடத்தின் வலிமை
உவகை கொள்ளும் ஆளுமையாகும்

விண்ணிலும் மண்ணிலும் பற்பல சோதனை
வியத்தகு பெண்களின் விருட்சமாய் சாதனை
தடைகளை உடைத்து நம்பிக்கை கொண்டு
தளராத மனத்தால் அதிஉச்சம் கண்டனரே

ஆணுக்கு பெண்சரி நிகர் என்றும்
அடுக்களை தாண்டி அனிமேசன் வரை
அத்தனை துறையும் ஆளுமை ஊன்றி
அவனிக்கு கிடைத்த அற்புதச் சான்று

பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்
அகப்பை பிடித்த கரம் அன்று
நவீனத்தில் மங்கைகள் இன்று
உழைப்பிலே உயர்ந்தவளாய் வென்று
உலகையும் ஆளுகின்றாள் நன்றே

Nada Mohan
Author: Nada Mohan