நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

நேவிஸ்பிலிப்

கவி இல(95) 22/03/23
மூத்தோரை வாழ்த்துவோம்.

மேன்மை பொருந்திய நம் மூத்தோர் -தங்கள்
ஆளுமையால் நற் பெயர் பெற்றவர்கள்
அனுபவப் பாடம் கற்று வாழ்க்கையெனும்
பள்ளியிலே ஆசான்களானவர்கள்

பண்புடன் வாழ்தலொன்றே
பாரினில் சிறந்ததென
தாலாட்டுப் பாட்டினிலே
ஊட்டியெம்மை வளர்த்தெடுத்து

தம்மறிவுக் கூர்மையாலே
நாமும் ஞானம் பெற்றிடவே
வாழ்க்கைப் பாடம் சொல்லியே
எம்மை நல் வழி நடத்தியவர்

இன்னிசை அமைத்தார்கள்
பாக்கள் புனைந்தார்கள்
செல்வங்கள் மிகக் கொண்டும்
அமைதியில் வாழ்ந்தார்கள்

எண்ணமதை திண்ணமுற உரைத்து
ஐக்கியத்தை நிலை நாட்டி வளர்ந்து
தங்கள் வழி மரபால் மாட்சிகள் பெறும் —எம்
முன்னோரை வாழ்த்துதல் முறையாமே.
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan