வசந்தா ஜெகதீசன்

எதிர்காலம் எதற்குள்….
தொழில்நுட்பம் வளர்ந்திட தொன்மை குன்றுது
அண்மைக் காலமாய் அதிகமாய் மாறுது
அவரவர் வாழ்வில் அவசர ஒட்டம்
உறவும் பற்றும் உயிர்ப்பற்ற தோற்றம்
எதிலுமே பிடிப்பற்ற காலத்தின் சுழற்சி
எங்கே தான் போகுமோ எதிர்காலப் புரட்சி
பசுமையாய் உலகு வெறுமையாய் மனது
பயிர்களில் செயற்கை உரத்திலே உணவு
கரிசனை குன்றுது காலமும் நகருது
நோய்களும் வளருது மருத்துவம் ஆளுது
மனிதமே எங்கே மறுமலர்ச்சியின் சுவடு
விடியலா இருளா விந்தை நிறைக்குது
எதிர்கால ஏற்றம் எதற்குச் சான்று
உலகை வெல்வது மனிதமா இணையமா.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading