Vajeetha Mohamed

சுடர்
[அல் குர் ஆன் ]

அறியாமைக் காலம்
அட்டூழியத்தின் கோலம்

அரபுதேசத்தின் சோகம்
அகற்றுபோனதன் வீவேகம்

தூயோன் அல்லாஹ்
தூதாய் தி௫மறை

தோற்றுவித்த சுடர்
நிசப்த இ௫ளகற்றியபடர்

தீமைகள்௨ணர வைத்தாய்
தீர்க்கமாய் அறிவுதந்தாய்

இறைவன் வகுத்தசட்டம் சரீயத்
இல்லையென்றால் ஈமானியச்சமூகம் முகீபத்

சத்தியத்தின் சரித்திரம் சாறு
சந்தனச் சொல்லோவியம் அ௫ட்பேறு

ஆத்மாவைச் சுத்திகரிக்கும் அ௫ட்சுரம்
அடிவேர் அறுத்து பாதகம்தவிர்கும் ஊற்றிய
௨ரத்தின் சுடர் தி௫மறை

௨யிரோடு பெண் சிசு புதைத்தல்
தவித்தல்
தாயின் பாதத்தின் கீழ் சுவனம்
பெண்மைக்கே பெ௫மை

சீதனமின்றி மஹர் கொடு
சீரமைத்த சுடர்

௨றைந்துபோன ௨ள்ளங்களை
உசிப்பி எழுப்பிய சுடர்

ஹிராக்குகையில் இறங்கி
௨லகம் எங்கும் வழங்கி

௨யிராய் ஓர் எழுத்துமின்றி வாழும்
சுடர் அல்குர் ஆன்

சாதி மதம் கலைந்து
நாடு மொழி கடந்து

படைத்தவன் முன் அனைவ௫ம்
சமன் என சன்மார்க்கம் வழங்கிய சுடர்
கல்வியைப் போதித்த சுடர்

முதல் இறங்கிம சூரா இக்ரஃ
ஓதுவீராக அறிவின் சுடர்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading