மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

pon.tharma.

வணக்கம் .
இது வியாழன் கவி -இலக்கம் 539.
சித்திரை வந்தாலே .
:::::::::::::::::::::::::::::::::::::
சித்திரை வந்ததாலே ,சந்தோஷக் கொண்டாட்டம் .
சில்லறைச் சேமிப்புகள் ,சேர்ந்துமே முன்னோட்டம் .

ஆலயம் எங்குமே ,ஆண்டு விழாவென்று ,அது பெரும்
கொண்டாட்டம் .
ஆண்டவன் தரிசனம் ,கண்டு மகிழவே –
பக்தர்கள் விரைந்தோட்டம் .

அரும்புகள் நிமிர்ந்துமே,ஆதவனைப் பார்த்து –
அசைத்திடும் ,தலை ஆட்டம் .

ஆழத்தில் உள்ளவை ,வேர்களைப் பாய்ச்சியே –
உன்னதக் களியாட்டம் .

அடுத்தது வைகாசி ,ஆங் காங்கே திருமணம் .
தொடுத்திடும் கருமங்கட்கு ,துணை நிற்போர் பெருமிதம் .
ஆக்கம் .
பொன் .தர்மா 12.04.23

Nada Mohan
Author: Nada Mohan