இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

09.05.23
கவி இலக்கம்-101
காணி

சொந்தக் காணி சோகமானதே
சிந்திய வியர்வையில் உழைத்த
அந்தக் காணி எமக்கில்லையென
ஆனதே

சந்ததிக் காணியைச் சுரண்டி
சீக்கிரமாய் பந்தமிலா சிங்களக்
குடிமனை ஆனதே

சந்நிதியிலிருந்த சுவாமி
பாதி இராத்திரியில்
புத்தரானதே

நாணிக் கோணி நடராசர்
காணியில் கள்ளத் தோணி
ஏறிக் குந்தியதே

“காணி நிலம் வேண்டும்
பராசக்தி” எட்டயபுரப் பாரதி
பாடியதே

காணியும் நிலமும் அடிக்கடி
காணாமல் போகுது
ஏன் எட்டியும் ஒட்டியும் பாராய்
கட்டி ஆளும் பராசக்தியே .

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading