அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

மூண்ட தீ…
வானுயர்ந்த வளர்ந்தோங்கி
வரலாற்றை தான் தாங்கி
யாழ்நகரின் மகுடமென
நூல்களின் தேட்டமென
கற்பதற்குச் சான்றாக
கருத்துரைக்கும் மன்றாக
ஆசியக் கண்டமதில்
பெயரோடு பூத்திருந்த
பெருந்தகைகள் பேறனாய்
பெருமையில் நிமிர்வாய்
மூண்ட தீக்குள் இரையானாய்
முற்றாக தகர்ந்தொழிந்தாய்
மாண்டார்கள் பலராய்
மதியற்ற செயலோடு
இன்னமும் ரணமாகி
தமிழினத்து தலைத்தூணாய்
சாம்பலின் மேடனாய்
ஈட்டியாய் தைக்கிறது
இதயத்தின் வலியிலே
அழிவாகி அடிசாய்ந்த
நூல்களின் குமுறல்கள்
காத்திடமாய் மீள் எழும்பி
கட்டியம் கூறிநிற்கும்
நூலகத்து வரலாறு
தமிழினத்து தடம்பதிப்பு
தரணியெங்கும் ஒன்றிணைப்பு.
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading