சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை நேரம்
கவித்தலைப்பு (விருப்புத் தலைப்பு)
உறவின் மேன்னம!
************************
உலகினில் உறவுகள் அற்ற வாழ்வு
பலமது தருமோ பாசம் இல்லா
பந்தம் தருமோ பரிவு பாரினில்
தந்தையும் தாயும் தந்திடும் உறவுகள்
சொந்தங்கள் ஆகுமே சொர்க்கமும் காணலாம்
தவறி விழுந்தால் தாங்கிப் பிடிக்கும்
கவலைகள் ஆற்றிக் கனிவும் காட்டும்
வலிமை மிக்கது வன்மம் அற்றது
சலிப்பே இன்றி சரளமாய் உறவாடி
நம்மைப் புரிந்துகொள்ளும் புனிதமான உறவு
எம்மாத்திரம் மகிழ்வு எங்குமே காணோம்!
கவிதை நேரத் தொகுப்பாளினிகட்குப் பாராட்டுகள். திரு.திருமதி.நடா மோகன் அவர்களுக்கு நன்றி. அனைத்துக் கவிப் படைப்பாளர்கட்கும் பாராட்டுகள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading