ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

06.06.23
கவி ஆக்கம் -105
ஆறுமோ ஆவல்

ஆறுமோ ஆவல் -என்றும்
தேறுமோ அறை கூவல்

நாறியே சாவல் -இனறும்
நாற்றிசையும் குறை கூறல்

அதிகாலை கூவும் சேவலும்,
அம்மா என அலறும் பசுவும்,
நன்றியான நாயும்,ஆடு,
பூனையும் நியாயம் கூறிடுமோ

முழுமூச்சாய் உழைத்த முதுசமோ
கழுதை உண்ட கடதாசி ஆயிடுச்சு

விழுதாய் ஊன்றிய சாமி
முழுதாய் புத்தர் பூமியாய்
மாறிடுச்சு

உழுது உண்ட வயலோ
பழுதான உரமோடு
பூச்சி புழு உண்டு
பூகம்பம் போலாயிடுச்சு

ஆவலோடு ஆவலாய்க்
காத்திருககும் அன்றைய வாழ்வு
இன்றும் தோன்றிடுமோ
இல்லை மீண்டும் நாறிடுமோ

ஆறுமோ ஆவல்
கூறுமோ ஏவல்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் இன்று பாரதி இருந்திருந்தால்... புதுக்கவியாளன் பாரதியே படைத்தெழு படைப்பே பாரெங்கும் முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...

    Continue reading