தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி
“எழுத்தின் வித்தே பூத்தெழு தமிழே ”
08.08.2023

முளைத்திடும் போதே
முத்தமிழ் பொழிவை
தாங்கிடும் வித்தே
மொழிகளின் பிறப்பில்
முதல் மொழியான
தாய் மொழி தமிழே
தன்னிகர் இல்லா
முத்தமிழ் பொழிவே!!

உள்ளம் கையில் உலகம் சிறைப்பட்ட போதும்
தேசப்பரப்பெல்லாம்
சிதறிய தமிழ் இனம்
பூத்தெழும் தமிழ் மொழியால் மழையாய் இணைந்திடும்!!

அடுத்த தலைமுறை
தரணியில் உரம் பெற
பல மொழி சேர்ப்பிலும்
தமிழ் மொழி வித்தே நம்
தலைமுறை பேணிடும்!!!
நன்றி
தவக்குமார்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading