புரிய முயலாதே 2
-
By
- 0 comments
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
பவானி மூர்த்தி
அகதி நாம் பெற்ற வரமா…….!?
அகதிகளாய் இருக்கின்ற
அவலமுமே
நிலைதானோ….
இக த்தினிலே ஈழமக்கள்
இடம்பெயரும் நிலை
சரிதானோ….
சுகமில்லா வாழ்வினிலே
சுற்றத்தை தேடுகின்றேன்..
அகமெங்கும் வேதனைகள்
அகதியெனும் முத்திரையால்….
வரமான தாயகத்து வாழ்க்கையுமே
இனி வருமோ…….
தரமில்லா வாழ்க்கையிலே
தனியாளாய் வாழுகின்றோம்…
இரக்கமதும் இல்லாத இறைவனிடம்
வேண்டுகின்றோம்…
கரம்பிடித்தே அழைத்திடவே
கருனையுள்ளம் வேண்டுகின்றோம்……
வாய்மூடி ஊமைகளாய்
வளமின்றி வாழ்கின்றோம்….
நோய் வந்த போதினிலும்
நொந்த மனம் மாற்றுதற்கே
தாய் தந்தை இழந்தவராய்
தாயகத்தை விட்டு விட்டு
பாய்ந்தோடி அகதிகளாய்
பாரினிலே அலைகின்றோம்…..
உறவுகளை தேடியுமே
உலகெங்கும் புலம்பெயர்ந்து
பிறந்த இடம் தொலைத்து
விட்டோம்
பின்பற்ற வழியின்றி…….
மறக்கவில்லை தாயகத்தை
மறுக்கின்றார் உரிமையினை
சிறப்பில்லா வாழ்வினிலே
சீற்றம் தான் என்றனுள்ளே…..
பணத்தின் பின் ஒடுகின்றோம்
பரிதவித்தும் நிற்கின்றோம்……
குணம் கெட்டும் போகின்றோம்
குலம் காக்க வழியின்றி…..
இணக்கமில்லா அகதி வாழ்க்கை
இன்பமில்லா சுடுகாடே……
வணங்குகின்றேன் ஈசனே…..நீ
வாட்டத்தை போக்கிடுவாய்…..
ஆதரவும் ஏதுமின்றி
அன்பில்லா உலகினிலே…..
வாதனையும் சோதனையும்
வருத்தத்தை தந்திடவே…….
மீதமுள்ள வாழ்வினையே
மீண்டிடாத துயரத்தால்……….
வேதனையாய் மாறிடுதே
வெந்த புண்ணும்
ஆறவில்லை……..
நாம் பெற்ற வரம் தானோ…?
நாடிலந்த அகதிதானோ…..?
—— ஆம் என்றால்
அழுகையுமே அன்றாடம்….
——-கண்ணீரில்—–
ஓம்புகின்ற உற்றோரை
ஒப்பற்ற உறவோரை…..
தேம்புகின்ற விழிநீரில்
தேக்குகின்றோம்
உருக்குலைதே …..
நாம் பெற்ற வரம் தானோ….?
நாடிழந்த அகதி தானோ…..?
நாடிழந்த அகதி தானோ….
நாம் பெற்ற வரம் தானோ ……?
வரம் தானோ ?
அகதி தானோ ?
நன்றி
வணக்கம்
அன்புடன் வாணிக்கும் ,அதிபருக்கும்
தட்டி கொடுக்கும் தொகுப்பாளினிக்கும்
வாழ்த்துகளும் நன்றிகளும் ,நன்றி
Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments