க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம்227

திரு நங்கை

அத்த நாதி
ஈசன் பாகம்
கொடுக்க சம்மதித்த
உலகம்!

அத்த நாதி
நிஜங்களை அங்கீகரிக்காத
மனித்த்திற்கு ..
ஏமாற்றங்களே விகுதி!

ஆதி மூலம் அகற்றி
அதற்கு பிரதிக்குறி வைத்து
ஆன வலி
உணர யாரால் முடியும்!

மாற்று இனம்
அங்கீகரித்தாலும்
பிறப்பு இனம்
அங்கீகரிக்காத குணம்!

கண்ணனின் காதலிகளும்
கடந்து போகின்ற
மீராக்களும்!!!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan