சக்தி சக்திதாசன்

நீலவான முன்றலிலே
முழுநிலவின் வெளிச்சத்தில்
மின்னுகின்ற தோரணங்கள்
கண்சிமிட்டிக் கதை கூறும்

மூடுகின்ற விழிகளுக்குள்
முழுவர்ணக் கனவுகளாய்
முப்பரிணாம காட்சிகளாய்
முடிச்சவிழ்க்கும் நினைவுகள்
சுட்டெரிக்கும் கதிர்களோடு
சூரியனின் சுற்றுப்பயணம்

விட்டகழும் பனிப்புகார்கள்
விரைந்தோடும் காலைகள்
புதியதோர் விடியலிது
புதியதொரு பயணமிது

பிறக்குமொரு புத்துணர்ச்சி
புதுமுயற்சி புதுத்துணிவு
எம்விடியல் எம்கையில்
எதுக்கிங்கே ஏக்கங்கள் ?

விழுவதெல்லாம் எழுவதற்கே
விளைந்ததெல்லாம் அனுபவமே !

விதைத்தவைகள் நன்மையெனில்
அறுப்பதுமே நன்மைகள்தான்
கதைகளுக்கு முடிவுண்டு
காலத்திற்கோ எல்லையில்லை
சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading