ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

12.09.23
ஆக்கம் -114
மலைப்பு

உறங்க மறுத்த விழிகளின்
தன் ஊமைப் பசிக்கு
உணவாக்கிய பிரமிப்பு

ஆறறிவு மனிதனை
மலைப்பாம்பு முழுதாய்
விழுங்கிய மலைப்பு

வானளவு உயர்ந்த கட்டிடம்
சிங்கப்பூரில் பார்த்து
மகிழ்ந்த வியப்பு

குதித்துக் குதித்து கொதித்து
எழுந்து குரல் எழுப்பும்
கனடா நயகரா நீர்வீழ்ச்சி
கண்ட பிரமிப்பு

இராமேஸ்வரம் போகும்
வழியில் பாம்பன் பாலம்
கடந்தது திகைப்பு

இறங்கி நின்று பார்த்ததும்
அலைகடல் துரத்தி துள்ளி
எழுந்த நுரை அள்ளித்
தலையில் கொட்டியதும்
அலையின் உழைப்போ
மலைப்பானது .

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading