பல தேவகஜன்

எனக்கான பெருவிருப்பம்
அம்மாவே!
அவளே என் வாழ்வின்
தலைப்பூ!
அம்மா! ஒருமுறையாவது
வந்தென்னை
உன்மடியில் சாய்த்துவிடு
உலகம் மறப்பேன்
உனதன்பில் திளைப்பேன்.

எத்தனை ஆண்டுகள்
அவதியோடு நானிங்கே
கருகிக் கடக்கிறேன்
எனக்கான அத்தனை வலிகளும்
உன் பிரிதலில் இருந்தே பெருகின.
எத்தனை கனவோடு
என்னை வளர்த்திருப்பாய்
அத்தனை கனவுகளையும்
நிஜமாக்கும் நிறைவோடு
இன்று நான் வளர்ந்திருக்கின்றேன்.
நிறைவு காண நீயுமில்லை
நிம்மதியாய் நானுமில்லை.

உருமறைந்தும் எனதுள்ளத்தில்
உயிர்வாழும் உத்தமியே!
நீ! மாண்ட கணத்திலிருந்து
மனமுடைந்தே வாழ்கின்றேன்.

எத்தனை மகிழ்வுகள்
என்னை கடந்து போயிருக்கும்
அத்தனை மகிழ்வுகளும்
அடுத்த கணமே!
மறந்து போயிருக்கும்.
அம்மா! என்றோ
உன்னோடு வாழ்ந்த
அத்தனை மகிழ்வுகளும்
இன்றும் எனக்குள்ளே
மறையாது நிலைத்தேயிருக்கு.

எனக்கான வாழ்வின்
அடுத்தடுத்த நகர்வுகளை
வகுத்திட நீயில்லாதபோது
நிலைகுலைந்தே நிற்பேன்.
நீ செய்த புண்ணியங்கள்தான்
எனக்கான வாழ்வின்
மகிழ்வுகளையும் நிறைவுகளையும்
தந்துகொண்டிருப்பதனை
இன்று நான் உணர்ந்திருக்கின்றேன்.

அம்மா!
உனது அரவணைப்போடு
வாழும் பாக்கியமற்ற
பாவியாக போன எனக்கு
உனது ஆசியோடாவது
என் வாழ்வை கடந்திட
வேண்டுமென்ற பேராசைக்கு
ஏமாற்றம் தந்திடாது
என்கூடவே இருந்துவிடு அம்மா!

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading