பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பல தேவகஜன்

எனக்கான பெருவிருப்பம்
அம்மாவே!
அவளே என் வாழ்வின்
தலைப்பூ!
அம்மா! ஒருமுறையாவது
வந்தென்னை
உன்மடியில் சாய்த்துவிடு
உலகம் மறப்பேன்
உனதன்பில் திளைப்பேன்.

எத்தனை ஆண்டுகள்
அவதியோடு நானிங்கே
கருகிக் கடக்கிறேன்
எனக்கான அத்தனை வலிகளும்
உன் பிரிதலில் இருந்தே பெருகின.
எத்தனை கனவோடு
என்னை வளர்த்திருப்பாய்
அத்தனை கனவுகளையும்
நிஜமாக்கும் நிறைவோடு
இன்று நான் வளர்ந்திருக்கின்றேன்.
நிறைவு காண நீயுமில்லை
நிம்மதியாய் நானுமில்லை.

உருமறைந்தும் எனதுள்ளத்தில்
உயிர்வாழும் உத்தமியே!
நீ! மாண்ட கணத்திலிருந்து
மனமுடைந்தே வாழ்கின்றேன்.

எத்தனை மகிழ்வுகள்
என்னை கடந்து போயிருக்கும்
அத்தனை மகிழ்வுகளும்
அடுத்த கணமே!
மறந்து போயிருக்கும்.
அம்மா! என்றோ
உன்னோடு வாழ்ந்த
அத்தனை மகிழ்வுகளும்
இன்றும் எனக்குள்ளே
மறையாது நிலைத்தேயிருக்கு.

எனக்கான வாழ்வின்
அடுத்தடுத்த நகர்வுகளை
வகுத்திட நீயில்லாதபோது
நிலைகுலைந்தே நிற்பேன்.
நீ செய்த புண்ணியங்கள்தான்
எனக்கான வாழ்வின்
மகிழ்வுகளையும் நிறைவுகளையும்
தந்துகொண்டிருப்பதனை
இன்று நான் உணர்ந்திருக்கின்றேன்.

அம்மா!
உனது அரவணைப்போடு
வாழும் பாக்கியமற்ற
பாவியாக போன எனக்கு
உனது ஆசியோடாவது
என் வாழ்வை கடந்திட
வேண்டுமென்ற பேராசைக்கு
ஏமாற்றம் தந்திடாது
என்கூடவே இருந்துவிடு அம்மா!

Nada Mohan
Author: Nada Mohan