இரா.விஜயகௌரி

தியாகமே தீர்ப்பானதா

ஊரெழு மண் உதித்து
உயிர்ப்புடன் தமிழ் விதைத்து
ஊனுடல் தம்மைத்தாமும்
விருப்புடன் எழுதி. வைத்தான்

பசிக்கொரு. விடை. கொடுத்து
பெரும் பசி கொண்டெழுந்த
அன்பினில் விளைந்த முத்து-அவன்
அகிலத்துள் அகிம்சை சொன்னான்

தியாகத்தின் ஆழிமுத்து-அவன்
தமிழினத்தின் வரத்தின் வைரம்
நெஞ்சம் நிறைந்ததாம் வீர மைந்தன்
அவன் உரைத்தவை உயிர் பெறுமோ

பொருள் நிறை அவன் பணி தான்
உயிர்த்தெழும் உயிர்ப்பாய் வருமோ
தலைமுறை நிலைத்து வெல்ல
தரும் ஒரு உணர்வாய் தொடர்வோ

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading