20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
10.10.23
கவி இலக்கம்-118
அலை ஓசை
ஆசை எனும் புயலில்
ஆணிவேர் சிக்கியதே
ஓசை காணும் அசலில்
கவி நயம் விளம்பியதே
மெத்தைக் கடலின் சொத்தென
குத்துக் கரணமுடன் ஆழம்
பார்க்குதே
முத்து முத்தான நுரையுடன்
பார்த்துப் பார்த்து வானளாவு
எழும்பி விழுந்து விளையாடி
முத்துக்குளியல் போடுதே
மழை நீர் கலக்க இடி மின்னல்
துலக்க வெடி வெடிப்பினும்
கவலையின்றி இடி முழங்குதே
அலை ஓசை
பட்டும் படாமல் கரை தொட்டு
விட்டுப் போகாமல் சொந்த மண்
நலம் விசாரித்து சுகம் பெற்ற
இன்பமுடன் அமைதியாய்
வீடு திரும்புதே அலை ஓசை .
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.