ஒளவை

அலையோசை
———————
அழகிய அலைகள்
…..அருகில் செல்கையில்
பழகிய நட்பாய்ப்
…..பாசமுடன் அணைக்குமே
இளகிய மனதில்
…..இன்பத்தைக் கூட்டியே
களவாடிச் சென்றிடக்
…..கண்களும் துடிக்குமே

ஆழிப் பேரலைகள்
…..அசுரனாய் வருகையில்
ஊழிக் காலமாய்
…..உலகம் அழியுமே
வாழ்ந்திடும் வேளையில்
…..வளமாய் இருந்தே
பாழ்நிலை மறந்தால்
…..பாரெல்லாம் இன்பமே

உள்ளத்தில் உந்தன்
…..உருவத்தின் ஓசையோ
வெள்ளத்தை நினைத்து
…..வேதனைக் கோலமாய்
கள்ளத்தனம் வேண்டாம்
…..கனிவு காட்டியே
கொள்ளை கொள்ளாமல்
…..கடமை செய்திடு

கடந்த காலங்கள்
…..கண்முன் வருகையில்
நடந்த சோகங்கள்
…..நரக வேதனையே
தொடரும் நாட்களில்
…..தொல்லை வேண்டாம்
அடங்கியே செல்வாய்
…..அலையே நீயும்.

ஔவை.

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading