சக்தி சிறீனிசங்கர்

இனிய இரவு வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித் தலைப்பு
ஆறு மனமே ஆறு
*********************
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: ஏழு மாச்சீர்கள்
_____________
சேறு சகதி சேர்ந்த வாழ்வு
செத்து மடியும் வரையில்
நீறு பூத்த நெருப்பில் வெந்து
நித்தம் கலங்க வேண்டாம்
கூறும் அடியார் குறைகள் தீர்க்கும்
குமரன் துணையைக் கொண்டு
நாறு கின்ற நந்த வனம்போல்
நல்ல வாழ்வை அமைப்பாய்!
சீலம் பெரிது சிந்தை இருத்து
சிக்கல் தீர்க்கப் பார்ப்பாய்
ஓலம் வேண்டாம் ஓட்டு வாழ்வை
ஒடிந்து போதல் தகுமோ
பாலம் அமைத்துப் பதியை நாடு
பார்ப்பாய் ஒருநாள் விடிவு
காலம் ஒருநாள் கனிந்து வருமே
கவலை வேண்டாம் உனக்கு!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading