வசந்தா ஜெகதீசன்

பள்ளிக்காலம்….
பருவங்கள் பலதாய்
பள்ளிக்காலம் முதலாய்
பழகிய பண்புகள் உயர்வாய்
படருதே வாழ்வாய்
அழகிய கோலம்
அழித்து அழித்து “அ” எழுதிய
காலம்
வரைமுறையற்ற வாழ்க்கைப் பாடம்
வரமாய் கிட்டிய கல்வியின் சாரம்

சுமையே அற்று சுதந்திர உலகில்
பறவைகள் போல பாடிப் பறந்தோம்
உயர்வுகள் கிட்ட உலகையே மறந்தோம்
அன்பில் நட்பு ஆட்சியில் வானம்
எல்லைகளற்ற பள்ளியின் காலம்
இனிதே மலர்ந்த வாழ்வின் வசந்தம்
இனியும் வருமா இந்த இளவேனில் காலம்!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading