பள்ளிப் பருவத்திலே-70

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-05-2025 பள்ளிப் பருவத்திலே புத்தகப் பையும் சீருடையும் புன்னகை கலந்த முகப்பொலிவும் எத்திசை பார்க்கிலும் தோழிகளும்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

07.11.23
இலக்கம்-122
தீப ஒளியே

ஒளியே தீப ஒளியே !
ஓஹோ எனச் சுற்றும்
பூமிக்கு என்ன தாகம்
சாமிக்கு அதிலென்ன
பாகம் ?

மேகம் பாடுது மழை வருகுது
தையிலே போகம் என்குது
விளக்குப் பந்த தீபம்
ஒளியூட்டுது

கணவன்,மனைவி,பிள்ளைகள்
ஒற்றுமையாக உணவு உண்டு
உள்ளம் மலருது

போட்டுக்க சட்டை இன்றித்
தவிக்கும் உள்ளம் தீபாவளிப்
புத்தாடை பெற்று மகிழுது

பாரினுள் சூழ்ந்த
பேரிருள் நீங்க
கார்த்திகைத் தீப
ஒளியூட்டிட

சாமி நெஞ்சம் குளிருது
பூமியோ புன்னகை
பூக்குது .

Nada Mohan
Author: Nada Mohan