மாற்றத்தின் ஒளியாய்

இரா.விஜயகௌரி மாற்றத்தின் ஒளியாய் மனங்களுள் தெளிவாய் ஏற்றத்தின் படியாய் துலங்கிடும் எழிலே காலத்தின் மாற்றம் கனிந்திடும் பொழுதில் தொடுத்திடும்...

Continue reading

கமலா ஜெயபாலன்

எச்சம்
மிச்சம் என்பது எச்சம் என்றால்
மச்சம் என்பது மறை ஆகும்
எச்சம் என்பது எமது வாரிசு
தஞ்சம் என்றே தாங்குவோம் யாவும்

சந்ததி காக்கும் சாதனை படைக்கும்
மந்தை யானால் மறக்கும் கடமை
விந்தை யுலகில் விழுதுகள் வேற்றுமை
எந்தையும் தாயும் ஏற்றுய உண்மை

பறவையின் எச்சம் பசளை ஆகும்
எரிந்து முடிய எச்சம் சாம்பல்
வரைந்து முடித்தால் அதுவே சித்திரம்
கறவையின் எச்சம் கிருமிகள் போக்கும்

பெயரெச்சம் வினயெச்சம் பெற்றது இலக்கணம்
பெற்ற பிள்ளை பெயரைக் காக்கும்
உற்ற நண்பன் உயிரைத் தருவான்
என்று நம்பி இருப்போம் உலகில்/

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan