மொழியே என் முகவரி..!!(2390)

மொழிதனை இயம்பிட்ட மழலைகளாய் நாம், தாய்மொழிதனை கேட்டு கருவறையில் கண்ணுறங்கும் போதே கற்றிட்ட சிசுக்களாய் நாம்! இவ்வுலகில் அவதரித்த பொழுதினிலே, “அம்மா” என்ற மூன்றெழுத்து...

Continue reading

தேவ கஜன்

கலவரம்

நிலவரம் மாற்றும் கலவரம்
பலதரம் கண்ட எம்மினம்
சுதந்திர நிழல் தேடி
சூழ்ச்சிக்குள் புதையுண்டு
சுடுகாடாய் போனதே இன்று.

நாங்கள் எழுவோம்
என்று நினைத்து
எழுந்த போதெல்லாம்
வீழ்ந்து போனதே
பல தருணங்கள்.

வாழ்ந்து விடலாம் என்றால்
வரும் ஆட்சியாளர்கள்
எங்கள் வாழ்வை
வழியில்லா வாழ்வாக்கிவிட்டார்கள்
என்பதே எம் பேரவலம்.

கலவரங்களுக்குள் கட்டுண்ட
எங்கள் வாழ்வு
வலிகள் நிரம்பி
நிம்மதியை கரைக்கின்றது
ஒதுக்கப்பட்டவர்களாக
உலகும் ஓரவஞ்சகம் புரிகின்றது.

நாங்கள் தனித்து விடப்பட்டு
தரம் குறைந்த பொருளாக
தூக்கி எறியப்படும் நிலை மாற
வழியொன்றும் இனி இல்லை
படைத்தவன் பக்கமும்
குறை சொல்ல ஒன்றும் இல்லை.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading