சர்வேஸ்வரி கதிரித்தம்பி

மனிதத்தின் நேயமே…..

எல்லாமான “நான்” என்ற சொல்லின் சிதைவு….
மனிதத்தின் நேயத்தின் பிறப்பு…
நேயத்தின் விழிகளின்
தூய்மையே
நல்லகத்தின்
ஊற்று….
உண்மையான வெண்மை ஒளிர…
நேர்மையான நோக்கம் எட்டும்
திசையெல்லாம்…
கூர்மையான ஆக்கமாக்கி……
குனிந்திடா தலைகொண்டு…
நிமிர்ந்த நெஞ்சத்தின் நிமிர்த்திய தோளுடன்….
பாசமும் நேசமும்
கரங்களில் பிணைத்து…..
தேடும் செல்வம் தேசத்தின் சொத்தாக்கி….
மண்ணுயிர் எல்லாம் ஒன்றென மெய்திடுமே…..
“எதைக்கொண்டு
வந்தோம்….
எதனை கொண்டு போகிறோம்”
கபடமும் விகடமும்
கருத்தினில் களைந்து….
அடிதடி மோகம்
அறவே அகற்றி….
ஆளும் ஐக்கியம்
அணிகலனாக….
பொங்கும் இங்கே
புனிதமான மாண்புமிக்க மனிதநேயம்….

-சர்வேஸ்வரி கதிரித்தம்பி. Germany

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading