ஜெயம் தங்கராஜா

சசிச

நிலவின் உலா

நிலவின் உலா நிலத்தில் விழா
துன்பம் இலா இன்ப நிலா
அழகுத் திங்களா இருளில் கண்களா
சிங்கார வான்நிலா சீவியம் வானிலா

வெண்ணிலா மண்ணில் வா நிலா
கவி நிலா செய்யின் புவி உலா
எண்ணில்லா பாக்களின் கரு அதுவல்லா
தேயாதே என்நிலா தெரியாதே மங்கலா

ஒளி நிலா ஒளிக்கும் நிலா
பொலிவுநிலா அமுதம் பொழியும் நிலா
காதலிக்கும் நிலா காதலுக்காய் நிலா
நகரும் நிலா சுகமாக்கும் உலா

இரசிக்கும் நிலா விழிகள் புசிக்கும் நிலா
தவழும் நிலா நெஞ்சை தழுவும் நிலா
தங்க நிலா நினைவுள் தங்கும் நிலா
இரவின் நிலா வரமாய் உலா

ஜெயம்

Nada Mohan
Author: Nada Mohan