ஜெயம் தங்கராஜா

கவி 703

கடந்துவந்த பாதையிலே

ஆயிரத்தைத் தாண்டிய ஒரு அற்புத பயணம்
திரும்பிப் பார்க்கின்றேன் விருப்பம் தீர்க்கின்றேன்
நானாகவா பயணித்தேன் வானாக உயர்த்தினார்கள்
உற்சாக வார்த்தைகள் ஊட்டமுள்ள பார்வைகள்

தளம் கிடைத்தது வளம் படைத்தது
தயக்கங்கள் உடைந்தன இமயமாய் படைத்தன
பங்களித்தார் கணங்களை தங்கமாக்கினார் தினங்களை
ஊக்குவித்த பாராட்டுக்கள் ஆக்கிவிட்ட வாழ்த்துகள்

புதுப்புது அனுபவங்கள் புதுமையான பிரசவங்கள்
எண்ணிப்பார்த்தால் அதிசயமே என்றும்காணா புதுசுகமே
இதமான கவியாய்வு இருதயத்தை கவ்விடும்
உயிருள்ள உரையாடல் உணர்வுடன் ஒட்டிவிடும்

திரும்பிப் பார்க்கிறேன் திருப்தியை உளம்சேர்க்கின்றேன்
வியாழன்கள் வந்தன வியாகுலங்கள் மறைந்தன
அள்ளி சுவைக்கவே சொல்லிலூறும் அமுதம்
தவித்த செவிகளும் தவிர்க்காமல் புசிக்கும்

எத்தனை வருடங்கள் அத்தனையும் மகுடங்கள்
கவிஞர்களின் எண்ணங்கள் கவிதையான வண்ணங்கள்
அர்ப்பணித்தார் நேரத்தை இப்பயண தூரத்தை
கரைந்த காலங்களாலேயே கவிஞரெனும் கோலங்கள்

நகர்ந்த பயணம் பகிர்ந்தது பயணும்
நிஜமான மகிழ்ச்சி நிழலுக்கும் நிகழும்
கடலளவு நன்றிசொல்லவது கடமையிலும் கடமை
போற்றப்படும் ஞானியே ஏற்றியதந்த ஏணியே

ஜெயம்
21-12-2023

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading