சிவாஜினி சிறிதரன்

சந்த கவி வாரம்_132

“சிரிப்பு”
அன்பின் வெளிப்பாடு
புன்னகை
மலர்ந்த பூவின் மணத்தை விட
மலர்ந்த முகத்தின் புன்சிரிப்பே
மேலானது!

புன்னகையே
வாழ்க்கை
அவை நித்தம் நித்தம்
பூக்களாய் மலர்ந்து மணம் வீசும்
வசந்தம்!

மகிழ்ச்சி என்பது உணர்ச்சி
இல்லாவிட்டால்
வாழ்வை சுமக்க முடியாத பெரிய சுமை
ஆகிவிடும்

மழையில் நான் நனைந்தேன் என்று சொல்வதை விட என் மகவின் சிரிப்பில் நித்தம் நித்தம் நனைகின்றேன் என்பது
உண்மை!

பிறக்கும் போது அம்மாவை அழ வைத்தோம்
வாழும் போது
எம்மை சுற்றி
இருப்பவர்களை சிரிக்க வைத்து சந்தோசப்படுத்தி வாழ்வாங்கு வாழ்வோம்!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading