மனோகரி ஜெகதீஸ்வரன்

சிரிப்பு

இதழ்விரிக்க அரங்கேறும் சிரிப்பு
இதுபல கதைக்கள் படிக்கும்
முகமதில் அடிக்கடி முளைத்து

அகநிலை காட்டும் அவரவர் சிரிப்பு
ஆளுமை வளர்வின்
அங்கமே சிரிப்பு

அன்பினைப் பூட்டும் அருளாளர் சிரிப்பு
அவதிகள் கொட்டும் ஆணவச் சிரிப்பு
ஆற்றலைக் கூட்டும் ஆளுகைச் சிரிப்பு
தூற்றலை வீசும்
துட்டரின் சிரிப்பு
துன்பியல் போக்கும் மழலையின் சிரிப்பு
மயக்கத்தை ஏற்றும் மங்கையின் சிரிப்பு
மருந்தாகும் மாசாறு மனத்தவர் சிரிப்பு

உமிளும் சிரிப்பு
ஊட்டின் மகிழ்வு
அமிழ்தாய் மாறும்
அனைவர் வாழ்வும்

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading