” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

போற்றப்பட வேண்டியவர்

ஜெயம் தங்கராஜா

கவி 706

போற்றப்பட வேண்டியவர்

கவிதை இவர் படைப்பார்
கவிதை இவரைப் படிக்கும்
ஆளுமை விண்ணைத் தொட்டும்
எளிமை இயல்போடு கூடுகட்டும்

மொழியை சுவாசித்தார் என்பேனா
அதற்குள்ளே வசித்தார் என்பேனா
அனுபவத்தை அழகாக வரிசமைப்பார்
வரிகளுள் தத்துவத்தை பிரசவிப்பார்

இவர் இரசித்தால் கவிதை உயிர்பெறும்
இவர் உச்சரிப்பாலே மொழி உச்சம்பெறும்
பூத்துக்கொண்ட கவிகளுக்கு வாசத்தை சேர்த்துக்கொண்டவர்
வார்த்தைகளை வசப்படுத்தும் சிந்தனாவாதி கற்பனாவாதி

சமுதாய சீர்கேடுகளை துணிவாக உரைத்திடுவார்
வினாக்குறியாய் வளையாது வியப்புக்குறியாய் நிமிர்ந்திடுவார்
பொன்னுக்கும் பொருளுக்கும் மயங்கிடும் புலவரல்ல
அன்னை மொழியையும் மண்ணையும் கண்ணாக்கியவர்

வைரமுடி சூடினாள் தைரிய சிங்கப்பெண்
பாமுகம் கண்ட பார்புகழ்பெற்ற புதுமைப்பெண்
நம்மவர் மத்தியில் மண்மேல் புதையல்
இவர் வாழ்த்துகளும் பாராட்டுகளும் அமிர்தம்

பலருக்கு முகவரிதந்த ஒரேயொரு முகவரி
உற்சாக வார்த்தைகள் ஆக்கும் சொல்வளங்கள்
இவர் காலத்தில் பயணிப்பது பாவலரின் பாக்கியமே
ஆக்கிவிட்ட கவிகளெல்லாம் உச்சரிக்கும் இவர் பெயரே

ஜெயம்
10-01-2024

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading