சிவருபன் சர்வேஸ்வரி

பொங்கும் உளமே தங்கும் தையே
<<<<<<<<<<<<<<<<<<<<

பொங்கிடும் மனது இன்பமாக நின்று
தங்கிடும் தையையும் வரவேற்றும் நன்று

எங்கும் சிறந்து இனிமையும் பிறந்திட

பங்கம் இன்றியே பாரதுவும் செழிக்கட்டும்

மங்களம் நிறைந்த உளமே என்றும்
மானிலம் சிறக்கவும் நிலைத்துமே இருக்கட்டும்

மான்பு மிக்கவும் புகழும் நிறையவும்

அன்புள்ளங்கள் அகிலத்திலே பேரொளிகள் ஆகட்டும்

வண்ணக் கோலம் போட்ட உள்ளம்
திண்மக் கனவும் கண்டு கொண்டே

பன்முகப் பட்டும் பண்புகள் ஓங்கவும்
பரனடியும் போற்றி நாளுமே துதித்தும்

கண்ணிய வரம்பிலே நடையும் மேவட்டும்
காலத்திலே நல்லறம் விழித்துமே சொரியட்டும்
சீலத்தில் குறைகளின்றி செல்வங்கள் பெருகட்டும்
பொங்கும் உளமே தங்கும் தையே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading