08
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-01-2026
காடு களனி அழித்து
கட்டடம் நீ வளர்த்தாய்
மலையைக் குடைந்து...
08
Jan
இரா.விஜயகௌரி
-
By
- 0 comments
வரத்தினை உரமாக்கு…..
பிறக்கும் நொடிகளும் திறக்கும் வரங்களும்
ஈண்டு மீண்டும் உனக்கென கிடைத்தன
வாழ்தலின் பொருளை வரமென...
08
Jan
குறைகளைக் குறைத்திட உயர்வு
-
By
- 0 comments
குறைகளைக் குறைத்திட உயர்வு
சோம்பலை நீக்கிடு சுதந்திரம் பெற்றிடு
கூம்பிய பாதையில் கூடியும் நில்லாது...
கீத்தா பரமானந்தன்
சந்தம் சிந்தும்சந்திப்பு!
மாசி!
பூமிமகள் ஆடையெனப்
பூம்பனியும் பெய்திருக்கச்
சோம்பலுடன் உடலதுவும்
போர்வையினைத் துணைக்கழைக்க
ஆம்பல் அல்லிக் குளங்களுமே
அழகொளிர நிறைந்திருக்க
வாட்டுகின்ற குளிரிடையே
வந்திடுவாள் மாசியவள்!
புலர்கின்ற. கதிரொளியும்
புரட்சியெனப் பனிவிலக்கிப்
புத்தொளியின் மெருகுடனே
பூபாளப் பாட்டிசைக்கும்!
மலர்கின்ற பொழுதுகளாய்
மகிழ்வுடனே தினந்தொடரும்!
ஆதிசிவன் இராத்திரியை
அடியவரும் தொழுதிருப்பர்
காதலதன் மாதமிதாய்க்
களித்திருக்கும் இளமைகளும்!
பூதலத்தில் மாசியுமே
பூரிப்பாய் நடமிடுவாள்!
கீத்தா பரமானந்தன்
29-01-24
காலமகள் கணக்கினிலே
Author: Nada Mohan
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...
06
Jan
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
சிறுமைகளை அகற்றிடவே பொங்கு
சினத்தினையே களைந்திடவே பொங்கு
கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு
காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால்
உறுத்துமட்டும்...
06
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பொங்குவாய்...
நிறைமதியாண்டாய்
நித்தம் மகிழ்வாய்
வரவுகள் சீராய்
வளர்மதி வையமாய்
வற்றாத கல்வியாய்
உலகியல் ஐக்கியம்
உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே
புலத்திலும்...