மாற்றத்தின் ஒளியாய்

இரா.விஜயகௌரி மாற்றத்தின் ஒளியாய் மனங்களுள் தெளிவாய் ஏற்றத்தின் படியாய் துலங்கிடும் எழிலே காலத்தின் மாற்றம் கனிந்திடும் பொழுதில் தொடுத்திடும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

நகுலா சிவநாதன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் ஒளியாய் மண்ணின் விடியல் மலர்கின்ற இன்நாள் வாழ்வின் பொன்னாள் மாண்புறும் மக்களின்...

Continue reading

சிவருபன் சர்வேஸ்வரி

இப்போ தெல்லாம்
************************

இப்போதெல்லாம் இனிமையான காலமும் மலருமே

அப்போதெல்லாம் நல்ல காரியமும் நடக்குமே
தப்பேதுமில்லாமல் தரணியும் சிறந்து நிற்கட்டுமே

நிற்போம் நாளும் நல்லறத்தின் வழியிலே

எங்கும் எப்போதும் எதிலுமே வெற்றியும்

தங்கும் பொங்கும் விளங்கும் நன்னாளாய்

சிந்தும் பைரவியாய் இசைத்திடும் எண்ணங்கள்
முந்தும் படைப்புக்கள் முழுமையாக நிறைவேறட்டும்

எடுத்தியம்பும் எண்ணங்கள் எல்லாம்
அடுத்தும் தொடுத்தும் அறநெறி காணட்டும்
மடக்கும் எண்ணம் யாரிடமும் வேண்டாம்

படைக்கும் மக்களின் உள்ளங்கள் வாழட்டும்
துலங்கும் காலத்தில் துன்பங்கள் நீங்கட்டும்

இலங்கும் இசைகளும் இன்னாட்டில் பரவட்டும்

விளங்கும் நிலையில் மக்கள் புரியட்டும்
கலக்கமில்லை இப்போதே தெரிந்துமே மகிழட்டும்

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan